செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மனவளர்ச்சி குற்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை,

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்


மனவளர்ச்சி குற்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை, தசை சிறைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை, தொழு நோயால் பாதிக்கப்பட்ட குணமடைந்தவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.2,000/- பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தொடர்ந்து,


2025-2026 ஆம் ஆண்டிற்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்க எதுவாக தாங்கள் வருடாந்திர உயிருடன் உள்ளார் என சான்று கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகலுடன் 31.05.2025-க்குள் (மாற்றுத்திறனாளி நபர் வரதேவையில்லை) பாதுகாவலர் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார். தகவல்