செய்திகள் :

கள்ளக்குறிச்சிமாவட்ட ம் கள்ளக்குறிச்சி அடுத்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கள்ளக்குறிச்சி, ஜூலை 14-நிறைமதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

post image

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி, ஜூலை 14-நிறைமதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி, தொடர்ந்து புண்ணிய யாவாசனம், பஞ்சகவ்யா பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், மிருத்சங்கிரஹணம், முதல் கால் பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

காலை கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஊர்போதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிக்கு வணங்கி ஆசி பெற்றனர்.