செய்திகள் :

கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை துறை சார்பில் தக்காளி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தொடங்கி வைத்தார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை  10.07.2023 தொடங்கி வைத்தார் . 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் , கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றம் அடைந்ததை முன்னிட்டு , குறைந்த விலையில் தக்காளி வழங்கிட கூட்டுறவு துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் . அதனடிப்படையில் இன்று கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் . இன்றைய நிலவரப்படடி வெளிச்சந்தையில் தக்காளி 1 கிலோ ரூ .120 முதல் 130 வரையும் , உழவர் சந்தையில் 1 கிலோ ரூ .116 க்கும் விற்பனை செய்யப்படுகிறது , தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையத்தில் தக்காளி 1 கிலோ ரூ .80 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . 


அதன்படி , இன்றைய தினம் தோட்டக்கலை மலைபயிர்கள் துறை மூலம் டான்ஹோடா ( TANHODA ) விற்பனை நிலையம் சிறப்பு விற்பனை தக்காளி 1 நபருக்கு 1 கிலோ வீதம் வழங்கப்படுகிறது . மேலும் இந்த விற்பனை நிலையத்தில் மார்மலாடு ஜெல்லி 500 கி ரூ .110 , ஜாம் ரூ .150 , ஜாதிக்காய் ஜெல்லி மற்றும் ஊறுகாய் ரூ .100 மற்றும் 150 , மாங்காய் ஊறுகாய் ரூ .150 , அன்னாசி பழம் சாறு ரூ .170 , திராட்சை பழம் சாறு ரூ .170 க்கும் விற்பனை செய்யப்படுகிறது . எனவே பொதுமக்கள் உழவர் சந்தையில் உள்ள தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையத்தில் தக்காளி வாங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் . 


இந்நிகழ்வில் , வேளாண்மை இணை இயக்குநர் திரு.சு.கருணாநிதி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை ) திரு.ரெ.விஜயராகவன் , தோட்டக்கலை துறை துணை இயக்குநர் திருமதி.எஸ்.சசிகலா , உதவி இயக்குநர்கள் திரு.முரளி , திருமதி.உமா , மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .