செய்திகள் :

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வி.சி.,கட்சி சார்பில் தலைவர் திருமாவளவன் நிதி வழங்கி, ஆறுதல் கூறினார்.

post image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில், 11 குடும்பத்தினருக்கு வி.சி.,

தலைவர் திருமாவளவன் தலா 10,000 ரூபாய்

வழங்கினார்.

பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது :

வி.சி., கட்சி சார்பில் மாநில அளவிலான

போதை ஒழிப்பு மாநாடு, உளுந்துார்பேட்டை,

அரசு ஐ.டி.ஐ., அருகில் அக்., 2ம் தேதி நடக்கிறது. இளைய சமுதாயத்தை சீரழிக்கும் மதுவை

ஒழிப்பதுதான் எங்களின் நோக்கம். அதற்காக

கட்சி, அரசியல் கடந்து, ஜனநாயக சக்திகளின்

துணையோடு போராட உள்ளோம். நாடு முழு

தும் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். அதற்கான பொறுப்பு, வி.சி.,கட்சிக்கு மட்டுமல்ல.

கூட்டணி கட்சியான தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும், இந்தியாவை ஆளும் பா.ஜ.,வுக்

கும் உள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தேர்தல் குறித்தபணிகளை செய்வோம். மற்ற நேரங்களில்

கூட்டணி சேரலாமா, சேரக்கூடாதா, லாபம் கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்து நாங்கள் சிந்திப்பது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.