செய்திகள் :

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று ( 15.08.2023 ) நடைபெற்ற சுதந்திர தினவிழா 2023 நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . 


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து , காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு , அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் . இந்திய சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் தேசிய கொடியின் மூவர்ண பலூன்களையும் , சமாதனத்தை பறைசாற்றும் விதமாக வெண்புறாக்களை பறக்கவிட்டார் . 


மேலும் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை , முன்னாள் படைவீரர் நலன் , தீயணைப்பு மீட்புபணிகள் துறை , ஊரக வளர்ச்சித் துறை , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை , முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் , இணை இயக்குநர் ( நலப்பணிகள் ) , துணை இயக்குநர் ( காசநோய் ) , மருத்துவ கல்லூரி மருத்துவமனை , சித்த மருத்துவம் , உதவி ஆணையர் ( கலால் ) அலுவலகம் , தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை , பொதுப்பணித்துறை கட்டடம் ( கட்டுமானம் ரூபராமரிப்பு ) , நெடுஞ்சாலைத்துறை , மாவட்ட தொழில் மையம் , பள்ளிக் கல்வித்துறை , கால்நடை பராமரிப்புத்துறை , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , வட்டார போக்குவரத்து அலுவலகம் , நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் , கருவூம் மற்றும் கணக்குத்துறை , வங்கி நிர்வாகம் , தமிழ்நாடு மின்பகிர்மான துறை , கூட்டுறவுத்துறை , வேளாண்மைத்துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை , மாவட்ட சமூக நலத்துறை , உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை , தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் , பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்தத்துறை , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ( வுளுேசுடுஆ ) , ஒருந்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டம் , வாழ்ந்து காட்டுவோம் திட்டம் , வருவாய்த்துறை , தேர்தல் , சமூக பாதுகாப்பு திட்டம் , தபால் துறை , திறன் மேம்பாட்டுத்துறை , உயர்கல்வி துறை , உடற்கூராய்வு பணியாளர்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 140அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களது சிறப்பான பணியினை பாராட்டி நற்சான்றிதழ்களையும் , சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்குபெற்ற காவலர்களுக்கு கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . தொடர்ந்து , கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது . பின்னர் , 101 தூய்மை பணியாளர்களுக்கு அவர்களின் பணியினை பாராட்டி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது . இவ்விழாவில் சுமார் 1200 பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் . இதில் சிறப்பாக கலைநிகழ்ச்சி செய்த மாணவ மாணவியர்களுக்கு கேடயத்தினையும் , பாராட்டுச் சான்றிதழினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . 


பின்னர் , சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் நடைபெற்ற மகளிர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார் . 


இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) திரு.து.சுரேஷ் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.செ.செல்வராணி , மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் திரு.சு.சுந்தர்ராஜன் , மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜி.ஜவஹர்லால் , மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ( பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு ) திரு.மணிகண்டன் , மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ( கணினி வழி குற்ற தடுப்புப் பிரிவு ) திரு.கே.சங்கர் , மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் திரு.எஸ்.சரவணன் , கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சு.பவித்ரா , கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் திரு.ரா.சுப்ராயலு , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் , காவல்துறையினர் கலந்து கொண்டனர் .