தமிழகத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு கூறினார்.
- விலைவாசியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு பேட்டி
கள்ளக்குறிச்சி, அக்.
தமிழகத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு கூறினார்.
கள்ளக்குறிச்சியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின்வெட்டு பிரச்சினை:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நான் பொறுப்பேற்ற நாள் முதல் மனைப்பட்டா இல்லாத மக்களுக்கு மனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓராண்டுக்குள் மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு விரைந்து மனைப் பட்டா வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். தமிழகத்தில் மளிகை பொருட்களின் விலைவாசி குறைக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு இருந்தாலும் ஏன் மின்வெட்டு என கேட்கிறார்கள்.
மின்வெட்டை தீர்ப்பதற்கு மின்சாரத்தை கொள்முதல் செய்தாலும் ஏன் இவ்வளவு விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள். அப்படியென்றால் என்னதான் செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கட்சியினர் தான் சொல்ல வேண்டும். மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். தகவல்














