செய்திகள் :

தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி , பேச்சுப்போட்டி 12.07.2023 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜீலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் . ” தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967 ஆம் நாளினை பெருமைபடுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜீலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் . 


தமிழ்நாடு நாளை நினைகூரும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பன்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 12.07.2003 அன்று கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படும் . கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிக்கானத் தலைப்புகள் முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பப்படும்போதே தெரிவிக்கப்படும் . 


மேலும் , பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை , பேச்சுப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ 10,000 - ம் , இரண்டாம் பரிசு ரூ .7,000 - ம் , மூன்றாம் பரிசு ரூ .5,000 - ம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் . 


மேலும் , மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர் . மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஜீலை 18 தமிழ்நாடு நாள் விழாவில் முதல் பரிசு ரூ 50,000 - ம் , இரண்டாம் பரிசு ரூ 30,000 - ம் , மூன்றாம் பரிசு ரூ 20,000 - ம் என பரிசுகள் வழங்கப்படும் . 


மேலும் , இப்போட்டிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் , விழுப்புரம் . செல்பேசி எண் . 97869 66833 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவிகள் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .