தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார வள பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 1 வட்டாரத்திற்கு தலா 1 நபர் வீதம் 9 வட்டாரத்திற்கு 9 வட்டார வள பயிற்றுநர் , பணியிடத்திற்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .
மேலும் , இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.07.2023 அன்று 25-45 வயது நிரம்பியிருத்தல் வேண்டும் . குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் . 3 முதல் 5 வருடங்கள் வரை சுய உதவி குழு / கூட்டமைப்புடன் பணியாற்றிய அனுபவம் , சமுதாய பயிற்றுநர் , வாழ்வாதார திட்ட அனுபவம் , முன்னாள் வட்டார வள பயிற்றுநர்கள் , இதர அரசுதுறை சார்ந்த பயிற்றுநர் ( முன்னாள் வட்டார வள பயிற்றுநர்களுக்கு அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு ) பணியில் முன்னுரிமை வழங்கப்படும் . MS office தெரிந்து இருத்தல் வேண்டும் . Android Mobile பயன்படுத்துதல் தெரிந்திருத்தல் வேண்டும் . தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு படிக்க , எழுத மற்றும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும் .
விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , கிராம ஊராட்சி சேவைமைய கட்டிடம் , நிறைமதி ( கிராமம் ) , நீலமங்கலம் ( அஞ்சல் ) , கள்ளக்குறிச்சி மாவட்டம் - 606 213 என்ற முகவரிக்கு 12.08.2023 - ம் தேதி மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் .















