செய்திகள் :

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது . அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL , IELTS , GRE , GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது . 


இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் . 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . பொறியியல் மற்றும் மேலாண்மை ( Engineering and Management ) தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் ( Pure Science and Applied Science ) வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் ( Agricultural Science and Medicine ) சர்வதேச வர்த்தகம் , பொருளாதார , கணக்கியல் நிதி ( International Commerce , Economic , Accounting Finance ) மனிதநேயம் , சமூக அறிவியல் , நுண்கலை சட்டம் , கலை மற்றும் அறிவியல் , ( Humanities , Social Science , Fine Arts , Law and Arts and Science ) போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும் . 


குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ .3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் . இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும் . இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணாக்கர்கள் தாம் விரும்பும் அயல் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம் . இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் . இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .