செய்திகள் :

திறன்பயிற்சி பெற்ற நபர்களுக்கு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் வழங்கினார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திறன்பயிற்சி பெற்ற 20 நபர்களுக்கு பயிற்சி சான்றிதழினை மாவட்ட அட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் இன்று ( 19.06.2023 ) வழங்கினார் . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி , சின்னசேலம் , தியாகதுருகம் , வடக்கனந்தல் ஆகிய நகர்புற ஏழை எளிய இளைஞர்கள் , இளைஞிகளுக் கள்ளக்குறிச்சி கபினிஷா பிரைவேட் நிறுவனத்தின் மூலமாக வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்க பயிற்சிகள் , குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர பழுது நீக்கப் பயிற்சிகள் மற்றும் இதர தொழில் நுட்ப பயிற்சிகள் 90 நாட்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது . மேலும் , இத்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்கள் , இளைஞிகளுக்கு பயிற்சி முடித்தமைக்கான சான்றிதழ்களை வழங்கிடும் பொருட்டு 20 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறன்பயிற்சி சான்றிதழ்களை வழங்கி ,இத்தொழில் திறன் பயிற்சியை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் . இந்நிகழ்வின்போது , தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் திரு.சு.சுந்தர்ராஜன் , உதவி திட்ட அலுவலர் திரு.ரா.மாதேஷ் , கபினிஷா பிரைவேட் லிமிடெட் ஒருங்கினைப்பாளர் திரு.மாதேஷ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் .