செய்திகள் :

நாடாளுமன்ற பொதுதேர்தலை முன்னிட்டு , மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , தச்சூர் கிராமத்திலுள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை , 2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு , கடந்த 04.07.2023 முதல் 22.07.2023 வரை பெல் நிறுவன பொறியாளரால் முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றுவருவதை , Mock Poll மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ( 24.07.2023 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார் . 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு , இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை முதற்கட்ட பரிசோதனை ( First Level Checking ) செய்து தயார் நிலையில் வைத்திருக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது . 


அதனடிப்படையில் , கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்டட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் தச்சூர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது . இதில் 2,893 பேலட் யூனிட்களும் , 1,823 கன்ட்ரோல் யூனிட்களும் , 1,968 வி.வி.பேட்களும் என மொத்தம் 6,684 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது . முதற்கட்ட பரிசோதனையில் , 2,860 பேலட் யூனிட்களும் , 1,759 கன்ட்ரோல் யூனிட்களும் , 1,890 வி.வி.பேட்களும் என மொத்தம் 6,509 இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது . மேலும் , 33 பேலட் யூனிட்களும் , 64 கன்ட்ரோல் யூனிட்களும் , 78 வி.வி.பேட்களும் என மொத்தம் 175 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனையில் நிராகரிக்கப்பட்டுள்ளது . இப்பணியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப பொறியாளர்கள் 04.07.2023 முதல் இன்று 24.07.2023 வரை மேற்கொண்டனர் . இன்றுடன் முதற்கட்ட பரிசோதனை முடிவுற்றது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் . 


இவ்வாயின்போது , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் , தேர்தல் வட்டாட்சியர் திரு.சையது காதர் , அரசு அலுவலர்கள் , மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர் .