நான் முதல்வன் திட்டம் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பள்ளி , கல்லூரி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார் .
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் ஏ.கே.டி பள்ளி கூட்டரங்கில் , மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டம் குறித்து பள்ளி , கல்லூரி மாணவ , மாணவியர்களுடன் , மாண்புமிகு பொதுப்பணித்துறை ( கட்டடங்கள் ) நெடுஞ்சாலைகள் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.ஏ.வ.வேலு அவர்கள் , மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேலாண்மை இயக்குநர் திருமதி.ஜெ.இன்னசென்ட திவ்யா , இஆப , சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் மரு.தரேஸ் அகமது , இஆப , அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று ( 19.07.2023 ) கலந்துரையாடினார் .
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பொறுப்பேற்றதிலிருந்து இரண்டு கண்களாக பார்ப்பது , சுகாதாரம் மற்றும் பள்ளி கல்வித்துறையை தான் . பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டது . ஒவ்வொரு மாணவரும் தனது துறையில் முதல்வனாக திகழ வேண்டுமென்பதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் . இத்திட்டத்தின் கீழ் 14 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர் . இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 1,425 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது . பள்ளி , கல்லூரி மாணவர்கள் வருங்காலத்தில் தொழில் முனைவோராகவும் , தொழில் வல்லுனராகவும் உருவாகிட இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் .
மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வந்து , வேலையில்லாத நிலையை மாற்றிடவே நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டது . அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்திற்கென கல்லூரி ஒன்றிற்கு ரூ .70 லட்சம் வீதம் ரூ .21 கோடியே 70 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . கைவினை பொருட்கள் செய்யும் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ .5 கோடி செலவில் கைவினை பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது .மாணவர்களின் கற்றலை அதிகரிக்க விளையாட்டு முறை கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ரூ . .1 கோடி செலவில் 1,000 பள்ளிகளில் விளையாட்டு முறை கற்றல் செயல்படுத்தப்படவுள்ளது . தமிழ்நாடு திறன் பயிற்சி மையங்களில் பயில்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படவுள்ளது . மாணவர்கள் பாடங்களை படித்து , மதிப்பெண் பெறுவதோடு நின்றுவிடாமல் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது .
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் , மிஷன் லேர்னிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை திறன் பயிற்சியில் வழங்கப்பட்டு வருகிறது . ஒவ்வொருவரின் தனித்திறமையை கண்டறிந்து அதனை ஊக்கப்படுத்துவதே நான் முதல்வன் திட்டத்தின் தனிச்சிறப்பு . நான் முதல்வன் திட்டத்தின்கீழ் திறன் பயிற்சிகளை வழங்க அந்தந்த கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கவுள்ளனர் . இதற்கொன பேராசிரியர்களுக்கு தனி பயிற்சி வழங்கப்பட உள்ளது . இதுபோன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள் . அரசு திட்டங்களின் வெற்றி என்பது அதனால் அடையும் பயனை பொருத்து அமையும் . நான் முதல்வன் திட்டத்தினை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திகொள்ள வேண்டுமென மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார் .
பின்னர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மாணவர்களுடன் திறன் பயிற்சி , வேலைவாய்ப்புகள் மற்றும் நான் முதல்வன் திட்டம் குறித்து கலந்துரையாடினார் .
தொடர்ந்து , சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 10 மாணவர்களுக்கு திறன் பயிற்சிக்கான சான்றிதழை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் .
இந்நிகழ் ல் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.மோகன்ராஜ் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வசந்தம்.க.கார்த்திகேயன் , சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.உதயசூரியன் , அனைத்து துறை அரசு அலுவலர்கள் , பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர் .















