செய்திகள் :

பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாவட்ட அளவிலான விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது . மேலும் , சொந்த நிலம் , குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பங்கேற்கலாம் . அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல் , முறையான மண்வள மேம்பாடு அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணங்களின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . 


மேலும் , இதற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ 15,000 / - , இரண்டாம் பரிசாக ரூ .10,000 / வரைவோலை வழங்கப்படும் . மேலும் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தோட்டக்கலைத்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் 30.09.2023 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் . 


மேலும் , கூடுதல் தகவலுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களான திருமதி . G. உமா கள்ளக்குறிச்சி- 8098327732 , திரு . V. முருகன் சின்னசேலம்- 9787863135 , திரு . D. சத்தியராஜ் சங்கராபுரம்- 9524737498 , திரு . K. முருகன் ரிஷிவந்தியம்- 9688940083 , திரு . S. சக்திவேல் திருக்கோவிலூர்- 7811967632 , திரு . K. முரளி திருநாவலூர்- 9976196911 , திருமதி . I. சொர்ணம் தியாகதுருகம் -8903555527 , திருமதி . C. விஜயலட்சுமி உளுந்தூர்பேட்டை 9894142635 , திரு . C. வாமலை வெள்ளிமலை- 9787237797 ஆகியோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை நேரில் அணுகியும் தகவல் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .