செய்திகள் :

பொது மக்களிடமிருந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆபு அவர்கள் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   03.07.2023  நடைபெற்றது . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை , வீட்டுமனை பட்டாக் கோருதல் , விதவை உதவித்தொகை , சாலை வசதி , ஆதரவற்றோர் உதவித்தொகை , பாட்டா மாறுதல் , தொழில் தொடங்க கடனுதவி கோருதல் , ஏரி , குளம் தூர் வாருதல் , பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் , நில அளவை தொடர்பான மனுக்கள் , வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன . மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் . 


மேலும் , மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன , அம்மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு அதற்கான விவரங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவித்திட அறிவுறுத்தினார் . 


பின்னர் , மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கு மானியமாக தலா ரூ .17,000 மதிப்பிலான காசோலையினை 2 மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கும் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி தலா ரூ .4,180 மதிப்பீட்டிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் 24 மனுக்களும் , பொது மக்களிடம் 363 மனுக்களும் பெறப்பட்டன . 


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் , மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி , மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திரு.க.கவியரசு , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பெ.தியாகராஜன் , உதவி ஆணையர் ( கலால் ) பா.ராஜவேல் , மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி.பா.ஷெர்லி ஏஞ்சலா , அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .