செய்திகள் :

பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் 92,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 14.08.2023 ) நடைபெற்றது . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை , வீட்டுமனை பட்டாக் கோருதல் , விதவை உதவித்தொகை , சாலை வசதி , ஆதரவற்றோர் உதவித்தொகை , பாட்டா மாறுதல் , தொழில் தொடங்க கடனுதவி கோருதல் , ஏரி , குளம் தூர் வாருதல் , பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் , நில அளவை தொடர்பான மனுக்கள் , வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன . மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் . 


முன்னதாக , மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் , அம்மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு அதற்கான விவரங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவித்திட அறிவுறுத்தினார் . 


தொடர்ந்து , மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் கைகால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் செல்வன்.பிரசாந்த் ( வயது 16 ) என்பவருக்கு மடக்கு சக்கர நாற்காலி ரூ .7,500 மதிப்பீட்டிலும் , மாற்றுத்திறனாளி ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ .17,000 வீதம் 5 மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ .85,000 த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் 19 மனுக்களும் , பொது மக்களிடம் 314 மனுக்களும் பெறப்பட்டன . 


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் , தனித்துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) திருமதி.பெ.இராஜலட்சுமி , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பெ.தியாகராஜன் , உதவி ஆணையர் ( கலால் ) திரு.பா.ராஜவேல் , வேளாண்மை இணை இயக்குநர் திரு.ச.கருணாநிதி , துணை இயக்குநர் வேளாண்மை திட்டம் திரு.செ.சுந்தரம் , அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .