செய்திகள் :

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ .7,18,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் வழங்கினார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 26.06.2023 ) நடைபெற்றது . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை , வீட்டுமனை பட்டாக் கோருதல் , விதவை உதவித்தொகை , சாலை வசதி , ஆதரவற்றோர் உதவித்தொகை , பாட்டா மாறுதல் , தொழில் தொடங்க கடனுதவி கோருதல் , ஏரி , குளம் தூர் வாருதல் , பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் , நில அளவை தொடர்பான மனுக்கள் , வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன . மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் . 


மேலும் , மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன , அம்மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு அதற்கான விவரங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவித்திட அறிவுறுத்தினார் . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ .1,05,000 வீதம் ரூ .4,20,000 மதிப்பிலான மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் , மாற்றுத்திறனாளி இயற்கை மரணம் உதவி தொகை 1 பயனாளிக்கு ரூ .17,000 த்திற்கான காசோலையினையும் , வங்கி கடன் மானியம் 1 பயனாளிக்கு ரூ .25,000 த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . பின்னர் , கள்ளக்குறிச்சி வட்டம் , சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வன் திராவிட்குமார் த / பெ வேலு என்பவருக்கு பொறியியல் பட்டப்படிப்பினை தொடர்வதற்கு ஏதுவாக ரூ .50,000 த்திற்கான காசோலையும் , சின்னசேலம் வட்டம் , இராயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.புவனேஸ்வரி க / பெ செந்தில்குமார் என்பவரின் மகன் செல்வன் ஹரிவசந்த் ( வயது 10 ) என்பவர் கடந்த 26.05.2020 அன்றும் , சங்கராபுரம் வட்டம் , ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.அய்யம்மாள் க / பெ சுப்பிரமணி என்பவரின் மகன் செல்வன் தனுஷ்குமார் ( வயது 15 ) என்பவர் கடந்த 12.12.2020 அன்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக , முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவித்தொகை தலா ரூ .1,00,000 வீதம் ரூ .2,00,000 த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . 


முன்னதாக , திருமதி.சந்திரகலா என்ற மாற்றுத்திறனாளி தனக்கு மாதாந்திர உதவித்தொகை 3 மாதங்களாக வங்கி கணக்கில் வரவில்லை என மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து உடனடியாக உதவி தொகை பெறுவதற்கான பணிகளைமேற்கொள்ள அறிவுறுத்தியதன் அடிப்படையில் ரூ .2000 / - வீதம் மூன்று மாதத்திற்கு ரூ .6000 / க்கான காசோலையினை இச்கூட்டம் நடைபெறும் பொழுதே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . உடனடியாக உதவித்தொகை பெற்றுக்கொண்ட மாற்றுத்தினாளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தார் . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் 19 மனுக்களும் , பொது மக்களிடம் 419 மனுக்களும் பெறப்பட்டன . 


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் , வேளாண்மை இணை இயக்குநர் திரு.ச.கருணாநிதி , தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திருமதி.பெ.இராஜலட்சுமி , மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திரு.க.கவியரசு , உதவி ஆணையர் ( கலால் ) பா.ராஜவேல் , மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி.பா.ஷெர்லி ஏஞ்சலா , அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .