மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 07.08.2023 ) நடைபெற்றது .
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை , வீட்டுமனை பட்டாக் கோருதல் , விதவை உதவித்தொகை , சாலை வசதி , ஆதரவற்றோர் உதவித்தொகை , பாட்டா மாறுதல் , தொழில் தொடங்க கடனுதவி கோருதல் , ஏரி , குளம் தூர் வாருதல் , பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் , நில அளவை தொடர்பான மனுக்கள் , வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன . மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் .
முன்னதாக , மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் , அம்மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு அதற்கான விவரங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவித்திட அறிவுறுத்தினார் .
தொடர்ந்து , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விரிவான காப்பீடு திட்ட நிதியில் அதிநவீன செயற்கை அவயங்கள் செய்து வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ .1,85,000 / - மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கை அவயம் , நவீன செயற்கை அவயம் மற்றும் நவீன செயற்கை கால் ஆகியவற்றை வழங்கினார் . மேலும் , பல்வேறு விபத்துகளில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர் சிறுமியர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .1 லட்சம் நிதியுதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் .
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் 27 மனுக்களும் , பொது மக்களிடம் 287 மனுக்களும் பெறப்பட்டன .
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் , தணித்துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) திருமதி.பெ.இராஜலட்சுமி , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பெ.தியாகராஜன் , உதவி ஆணையர் ( கலால் ) திரு.பா.ராஜவேல் , துணை இயக்குநர் வேளாண்மை திட்டம் திரு.செ.சுந்தரம் , அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .















