மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கோமுகி அணையிலிருந்து மாண்புமிகு
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு
அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார், இஆப, சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்:
திரு.தா.உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வசந்தம்.க.கார்த்திகேயன்,
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று
(07.10.2023) விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
தண்ணீர் திறந்து வைத்து மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, கள்ளக்குறிச்சி மாவட்டம்
சின்னசேலம் வட்டம் கோமுகி நதி அணையிலிருந்து 07.10.2023 முதல் பாசனத்திற்காக தண்ணீர்
திறந்து வைக்கப்படுகிறது. இத்தண்ணீர் திறப்பினால் பழைய பாசனத்தில் 5,860 ஏக்கர் பரப்பளவு
நிலமும், புதிய பாசனத்தில் 5,000 ஏக்கர் பரப்பளவு நிலமும் என மொத்தம் 10,860 ஏக்கர் பரப்பளவு நிலம்
பாசன வசதி பெற்று பயனடைகிறது. பழயை பாசனத்திற்கு 60 கன அடி வீதமும், புதிய பாசனத்திற்கு 50
கன வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. 22.10.2023 முதல் 05.12.2023 வரை 45 நாட்களில் பழைய
பாசன வாய்காலில் 120 கன அடியும், புதிய பாசன வாய்காலில் 100 கன அடியும் தண்ணீர் விட தமிழக
அரசு முடிவு செய்து நீர் வெளிறே்றப்படவுள்ளது. இந்த அணையின் மொத்தம் நீர் மட்டம் 46 அடியாகும்.
அணையின் மொத்த கொள்ளவு 560.96 மி.க. அடியாகும். இவ்வணையிலிருந்து தற்போது தண்ணீர்.
திறப்பதன் மூலம் பழைய பாசன பரப்பில் 7 கிராமங்களும், புதிய பாசன பரப்பில் 33 கிராமங்களும் என
சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து விவசாயப்
பெருமக்கள் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி
வருகிறார். மேலும், ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் நீர் மேலாண்மை விரிவுப்படுத்த
பொதுப்பணித்துறையிலிருந்து நீரீமேலாண்மை துறை என தனித்துறை உருவாக்கி நீர் வளத்துறைக்கு
அதிக அளவில் திட்டங்களையும், நிதிகளையும் வழங்கி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில்
மாதம் ரூ.1,000 தகுதியுடைய அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிடைக்கப்பெறாத
மகளிர்கள் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்தால்,
தகுதியின் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என மாண்புமிகு பொதுப்பணிகள்,
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.மோகன்ராஜ், மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ச.செல்வராணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்
திருமதி.இரா.புவனேஸ்வரி பெருமாள், சிறப்பு தலைமைப்பொறியாளர் (நீர் வளத்துறை) (கூ.பொ)
வெள்ளாறு வடிநில வட்டம் பொறி.பி.பாபு, செயற்பொறியாளர் (நீர் வளத்துறை) வெள்ளாறு வடிநில















