மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் எதிர்வரும் 16.08.2023 புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் எதிர்வரும் 16.08.2023 புதன்கிழமை அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது .
தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் . இம்முகாமில் 10 ஆம் வகுப்பு , 12 ஆம் வகுப்பு , ஐடிஐ , டிப்ளமோ , பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெறலாம் . மேலும் , அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும் அரசின் கடனுதவி பெறுவது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது .
மேலும் , இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு
பயன்பெறுமாறு
மாவட்ட
ஆட்சித்தலைவர்
திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .















