செய்திகள் :

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற 1,187 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் , மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் 24.06.2023 நடைபெற்றது . 


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் அனைத்து பிரிவுகளிலும் விளையாட்டு துறைகளை முதன்மையாக கொண்டுவருதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் . அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் , அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் , பொதுமக்களுக்கான போட்டிகள் , பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் , கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் என 5 பிரிவின்கீழ் கடந்த பிப்ரவரி மாதம் 10.02.2023 முதல் 28.02.2023 வரை நடைபெற்றது . இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது . 


மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பிரிவில் 534 மாணவர்களும் , கல்லூரி மாணவர்கள் பிரிவில் 174 மாணவர்களும் , பொதுபிரிவில் 227 நபர்களும் , அரசு ஊழியர்கள் பிரிவில் 182 நபர்களும் , மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 நபர்களும் என மொத்தம் 1,187 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . 


இதில் முதல் பரிசு 406 நபர்களுக்கு ரூ 3,000 / - வீதம் ரூ .12,18,000 / - இரண்டாம் பரிசு 403 நபர்களுக்கு ரூ 2,000 / - வீதம் ரூ 8,06,000 / - மூன்றாம் பரிசு 378 நபர்களுக்கு ரூ .1,000 / - வீதம் ரூ .3,78,000 / -என மொத்தம் 1,187 நபர்களுக்கு ரூ .24,02,000 த்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது . இப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் . பள்ளி கல்லூரி மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டு திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் . 


இந்நிகழ்வில் , மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.ரா.ஜெயகுமாரி , மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.ஜெ.செல்வகுமார் , உடற்கல்வி ஆசிரியர்கள் , மாணவ , மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .