மேரி மாத்தி மேரா தேஷ் திட்டத்தின்கீழ் துப்புரவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேரி மாத்தி மேரா தேஷ் ( Meri Maati Mera Desh ) திட்டத்தின்கீழ் துப்புரவு மற்றும் மரம் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் இன்று ( 12.08.2023 ) தொடங்கி வைத்தார் .
நாடு முழுவதும் 09.08.2023 முதல் மேரி மாட்டி மேரா தேஷ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது . இத்திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து , குப்பைகளை அப்புறப்படுத்தும் துப்புரவு பணியில் ஈடுபட்டார் . தொடர்ந்து , அமிர்த சரோவர் இயக்கத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள அமிர்தகுளத்தில் மேரி மாத்தி மேரா தேஷ் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள குளத்தின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும்பணியினை தொடங்கி வைத்தார் .
மேலும் , இப்பணியில் ஈடுபடும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளர்களுக்கும் , மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கும் ஒரு நாளைக்கான முழு ஊதியத்தினை வழங்கிட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் . மேலும் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியிபுரியும் பணியாளர்களிடம் இத்திட்டம் குறித்தும் , தினசரி நடைபெறும் பணிகள் குறித்தும் , வழங்கப்படும் ஊதியம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார் .
மேரி மாத்தி மேரா தேஷ் திட்டத்தின்கீழ் நமது சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்வதோடு , மரக்கன்றுகளை நட்டு மண் வளத்தினை காத்திடவும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும் , பொதுமக்களுக்கும் அறிவுரை வழங்கினார் .
இந்நிகழ்ச்சிகளில் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ச.செல்வராணி , உதவி இயக்குநர் ( ஊராட்சிகள் ) திருமதி.ரெ.ரெத்தினமாலா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ) திரு.பி.வி.குமார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .















