வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிப்பது , புதிய வாக்குச்சாவடி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் அவர்கள் தலைமையில் வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிப்பது , புதிய வாக்குச்சாவடி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி இடமாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று ( 01.09.2023 ) நடைபெற்றது . மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது :
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி , ரிஷிவந்தியம் , சங்கராபுரம் உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,274 வாக்குச்சாவடி மையங்களில் , வாக்காளர்களின் எண்ணிக்கை 1,500 க்கும் மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது , புதியதாக வாக்குச்சாவடி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி இடம் மாற்றம் , கட்டிடம் இடமாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் ஆலோசனை நடைபெற்றது .
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு , வாக்குச்சாவடிகள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதன் தொடர்பான கருத்துகளையும் , ஆலோசனைகளையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தார் .
இந்நிகழ்வில் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் , கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சு.பவித்ரா , திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ரெ.கண்ணன் , தனி வட்டாட்சியர் தேர்தல் திரு.விஜய பிரபாகரன் , வருவாய் வட்டாட்சியர்கள் , தேர்தல் துணை வட்டாட்சியர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .















