விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார், இஆப, அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
27.10.2023 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப,
அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2023-ஆம் மாதத்திற்கான விவசாயிகள்
குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 27.10.2023
வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை நடைபெற
உள்ளது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேளாண்மை உழவர்
நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண்
விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை
பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்
துறை, வங்கியாளர்கள் மற்றும் பிறசார்பு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு
விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க
பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை
நேரடியாக அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.















