வீரதீர செயல் புரிந்து வரம் பெண் குழந்தைகள் மாநில விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்
தமிழக அரசு , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் " பெண் குழந்தைளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் , அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும் , பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் , பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு , வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக தேசிய பெண் குழந்தை தினமாக ஜனவரி 24 ல் மாநில அரசு விருது ஒன்றை அறிவித்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வீரதீர செயல் புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் ( ஜனவரி 24 ) பாராட்டு பத்திரமும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது .
அதன்படி , பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் , பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு , பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல் , பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் , மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள் , கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல் , ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் , போன்ற சாதனை புரிந்த குழந்தைகளுக்கு வருகிற ஜனவரி 2024 ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில அரசு விருது வழங்கிட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட ( 31 டிசம்பர் 2022 ன் படி ) தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து சாதனை விவரங்கள் வரவேற்கப்படுகின்றன .
குழந்தையின் பெயர் , தாய் / ந்தை
ஆதார் எண் , புகைப்படம் , ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர , தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும் . இணைக்கப்பட்ட கருத்துரு 31.08.2023 அன்று மாலை 5.45 க்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் .
மேலும் விருதிற்கான விண்ணப்பங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலள்ள முதன்மை கல்வி அலுவலர் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் , மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் , காவல் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாகவும் உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலத்திலும் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .















