செய்திகள் :

ஸ்கூட்டர் வண்டி கேட்டு உதவி கோரிய மாற்றுத்திறனாளி - கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 31.07.2023 ) நடைபெற்றது . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை , வீட்டுமனை பட்டாக் கோருதல் , விதவை உதவித்தொகை , சாலை வசதி , ஆதரவற்றோர் உதவித்தொகை , பாட்டா மாறுதல் , தொழில் தொடங்க கடனுதவி கோருதல் , ஏரி , குளம் தூர் வாருதல் , பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் , நில அளவை தொடர்பான மனுக்கள் , வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன . மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் . 


முன்னதாக , மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் , அம்மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு அதற்கான விவரங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவித்திட அறிவுறுத்தினார் . 


தொடர்ந்து , கடந்த 27.07.2023 அன்று திருக்கோவிலூர் வட்டாரத்திற்குட்பட்ட ஜி.அரியூர் கிராமத்தில் , ஆய்வை முடித்துக்கொண்டு வரும் வழியில் மாற்றுத்திறனாளி திரு.ராமதாஸ் ( வயது 52 ) அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கூப்பிட்டபொழுது திடீரென காரிலிருந்து இறங்கி சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளியிடம் நேரடியாக கோரிக்கை கேட்டறிந்து , மாற்றுத்திறனாளியின் கோரிக்கையான 3 சக்கரம் ஸ்கூட்டர் வண்டி உடனடியாக வழங்கிப்படும் என உறுதியளித்து உத்தரவிட்டார் . 


அதனடிப்படையில் , இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சலவை தொழிலாளியான மாற்றுத்திறனாளி திரு.ராமதாஸ் ( வயது 52 ) அவர்களுக்கு ரூ .83,500 / மதிப்புள்ள இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் வழங்கினார் . ஸ்கூட்டர் வண்டியை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார் . பின்னர் , இரண்டு மாற்றுத்திறனாளி வாரிசுதாார்களுக்கு ஈமசடங்கு உதவித்தொகை ரூ .17,000 / வீதம் ரூ . 34,000 / க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் 21 மனுக்களும் , பொது மக்களிடம் 312 மனுக்களும் பெறப்பட்டன . 


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் , தணித்துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) திருமதி.பெ.இராஜலட்சுமி , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பெ.தியாகராஜன் , உதவி ஆணையர் ( கலால் ) திரு.பா.ராஜவேல் , துணை இயக்குநர் வேளாண்மை திட்டம் திரு.செ.சுந்தரம் , அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .